The Indian Times

கோதையை பற்றி தவறாக பேசிய அர்ஜுனை பொளந்துகட்டிய தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அர்ஜுன் யார் என்ற உண்மை அனைவர்க்கும் தெரிய வருகிறது,அதே சமயம் அர்ஜுன் கோதையை ஏமாற்றி சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு கோதையை வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளார்,கோதை குடும்பத்தை தமிழ் அவரது வீட்டிற்கு அழைத்து வருகிறார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் அர்ஜுனும் அவரது நண்பரும் தமிழ் முன்னாள் கோதையை பற்றி தவறாக பேசவே காண்டாகிய தமிழ் இருவரையும் அடித்து விரட்டுகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : VIJAYTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in