The Indian Times

அபியை சுட வந்த செண்பகம்… செண்பகத்தை பற்றி உண்மையை தெரிந்துகொண்ட அபி.. தென்றல் வந்து என்னை தொடும் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது.இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது சுடரை பற்றி தெரிந்துகொள்ள வெற்றி ராஜஸ்தான் செல்கிறார்,வெற்றியின் நடவடிக்கைகளை மறைமுகமாக அபியிடம் கூறுகிறார் கண்மணி.சுடரை பற்றி வெற்றிக்கு தெரிய கூடாது என அபி அவரை தடுக்க ராஜஸ்தானில் தேடி அழைகிறார்,அவரை பின்தொடர்ந்து சுடரை பற்றி வெற்றி எதுவும் தெரிந்துகொள்ள கூடாது என வருகிறார் அபி.தற்போது வெற்றி விஏஓ அலுவலகத்திற்கு வந்து தனது மகளை பற்றி தெரிந்துகொள்ள வருகிறார்.அங்கு சுடர் தான் மகள் என்பதை தெரிந்துகொள்கிறார் வெற்றி. அபியை புரிந்துகொண்ட வெற்றி மீண்டும் அபியுடன் சேர அவர் மீது காதல் கொள்கிறார்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கபிலன் செண்பகத்தை பற்றி விசாரித்து அவர் தப்பானவர் என்பதை தெரிந்துகொண்டு அபியிடம் கூறுகிறார்,அதே சமயம் செண்பகமாக இருக்கும் மது துப்பாக்கியை எடுத்து அபியை சுட வருகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in