The Indian Times

அம்மாவுக்கு கார் வாங்கி கொடுத்து மகிழ்ந்த TTF VASAN

இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.

சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே உருவாகிறது.முன்னதாக யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாசமாக பேசிய மதன் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்தார்.

Advertisement

அவர் தற்போது சிறையில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது புதியதாக TTF வாசன் என்பவர் ஆபத்தான முறையில் பைக்குகளை ஒட்டி இளைஞர்களையும் ஆபத்தில் தள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

அண்மையில் வாசன் பைக்கில் அதிகவேகமாக சென்றதாகவும் அதனால் விபத்துகள் நேரும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது அதிவேகத்தில் சாகசத்தில் ஈடுபட்ட அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது,

இதில் வாசன் வலது கை முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது.உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்,

தற்போது சிறைக்கு சென்ற வாசன் வெளியே வந்துள்ளார்.

Advertisement

இவர் தனது அம்மாவுக்கு புதிய கார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in