The Indian Times

இயக்குனர் அமீர் நாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு பட Teaser வெளியாகியது

இயக்குனர் அமீரின் படத்திற்கு மட்டுமில்லாமல் அவரின் நடிப்பிற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,அந்தளவுக்கு தனது நடிப்பினால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் இவர்.நடிகர் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக அடியெடுத்து வைத்தார் அமீர்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய ராம் மற்றும் பருத்திவீரன் போன்ற படங்கள் மாபெரும் ஹிட் அடித்து சினிமாவில் உச்ச இயக்குனராக அமீரை உருவாக்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இயக்குனராக இருந்த அமீர் யோகி எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகினார்,இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அமீர்.வடசென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் இன்றுவரை பல ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளது.

Advertisement

தற்போது இவர் இறைவன் மிகப்பெரியவன் என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இவர் சென்னையில் புதியதாக காபி ஷாப் ஒன்றை திறந்துள்ளார். தற்போது இவர் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : ZEE MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in