ரசிகரின் தோளை தட்டிக்கொடுத்த தளபதி விஜய்! வைரல் வீடியோ

2021 சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. நாட்டிற்காக ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் தருணம் இது தான். இதுவரை தமிழ் நாட்டில் பெரும்பான்மை ஆட்சியை பிடித்த காட்சிகள் என்றால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு காட்சிகள் மட்டும் தான். அது மட்டுமில்லாது கருணாநிதி அவர்கள் மற்றும் ஜெயலலிதா அவர்கள் இல்லாத முதல் தேர்தல் இதுவே. இம்முறை அதிமுக , திமுக , பாஜக , நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் , காங்கிரஸ் , அமமுக ஆகிய காட்சிகள் போட்டியிடுகின்றனர்.இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. காலை முதல் மக்கள் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இளையத்திலகம் பிரபுவுக்கு மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய ரோபோசங்கர்

விளம்பரம்

சூடுபிடித்துள்ள தேர்தல் களத்தில் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. வேலைக்கு செல்லக்கூடிய நபர்களும் காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்து வருகின்றனர். மக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரமுகர்களும் , நடிகர்களும் , முக்கிய பிரமுகர்களும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காலையில் சைக்ளில் வாக்கு பதிவு செய்யவந்தார் நடிகர் விஜய். அப்போது வாக்கு சாவடியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சைக்ளில் வந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார் விஜய். அப்போது அவரை ரசிகர்கள் அனைவரும் சுற்றிவளைத்து கையை பிடித்து இழுக்க தொடங்கினர். அதில் தன் இசைக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்த ரசிகரின் தோளை தட்டி கொடுத்துள்ளார் விஜய். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment