விக்ரம் திரைப்படத்தின் வில்லன் இவர் தான்! வெளியான புதிய அப்டேட்

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். 2021 சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சார பணியாற்றி வந்த கமல்ஹாசன் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.லோகேஷ் கனகராஜ் வெறும் 3 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் மூன்று படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விக்ரம் திரைப்படத்தின் வில்லன் இவர் தான்! வெளியான புதிய அப்டேட் 1

விளம்பரம்

கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் பற்றி சொல்லவே வேண்டாம். 50 சதவீத இருக்கையில் வெளி வந்தாலும் வசூல் சாதனை படைத்தது.இதில் விஜய் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது தான் படத்திற்கு ப்ளஸ் என்று கூறலாம். அந்தளவிற்கு லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விக்ரம் திரைப்படத்தின் வில்லன் இவர் தான்! வெளியான புதிய அப்டேட் 2

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு இணையான வில்லன் யார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை பகத் ஃபாசில் ஆன்லைன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment