The Indian Times

Release ஆவதற்கு முன்பே Reject ஆன blue சட்டை மாறன் திரைப்படம்!

ஒரு சினிமாவை எடுப்பது எவ்வளவு கடினம் என்று அந்த படத்தை உருவாக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தான் தெரியும். அப்படி கஷ்டப்பட்டு எடுக்கும் படத்தையும் பல youtube சேனல்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சங்களுக்காகவே பெயர்போனவர் ப்ளூ சட்டை மாறன். எந்த படம் வெளியானாலும் இவரது விமர்சனத்தை பார்த்த பிறகு படம் பார்க்க செல்லும் பலர் இருக்கின்றனர். இதனால் மாறனுக்கு நிறைய மிரட்டல்களும் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது யூடுபே சேனலை தாண்டி வெள்ளி திரைக்கு எய்ம் செய்தார் ப்ளூ சட்டை மாறன். ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியாக இருந்த படம் ஆண்டி இந்தியன். இந்த படத்தில் நரேன் , ராதாரவி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பியுள்ளது படக்குழு.

Advertisement

ஆனால் ஆண்டி இந்தியன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தரமுடியாது என்று சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தரமுடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை ஓ.டி.டி யில் வெளியிட முயற்சித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in