The Indian Times

மாறுவேடத்தில் தளபதி விஜய் – ரசிகர்களுடன் மாஸ்டர் படம் பார்த்தார் – வீடியோ

தளபதி விஜய் எப்போதும் திரையரங்குகளில் வெளியாகும் தன்னுடைய படத்தை ரசிகர்களுடன் பார்ப்பது வழக்கமாக கொண்டவர். படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் அப்படி ரியாக்ட் செய்கிகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இப்படி செய்கிறார், அப்படிதான் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை ஒரு திரைரங்குக்கு மாறுவேடத்தில் சென்று தன ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது விஜய் ரசிகர்கள் அதை வைரலாகி வருகின்றனர்.

Advertisement

தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் படம் திரை அரங்குகிளில் வெற்றி நடை போட்டு வருகிறது. ஐம்பது சதவீகிதம் இருக்கைகளுடன் பெரும்தொற்று கட்டுப்பாடுகளுடன் படம் வெளியானாலும் படம் வேல லெவல் என்பதால் வசூலை அல்லி வருகிறது. மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால் 2 நாட்களில் உலகம் முழுக்க ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அனிருத் இசையில் , விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 25 பிளஸ் கோடி ரூபாய் ஆகும். 2 நாட்களில் வசூல் தொகை ரூ.43 கோடியை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 1.21 கோடியும் 2-ம் நாளில் ரூ.1.05 கோடியும் என மொத்தம் ரூ. 2.26 கோடி வசூல் ஆகி இருக்கிறது.

https://youtu.be/rkjfsibgD6o?t=10

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in