The Indian Times

வலிமை படம் எப்போ ரிலீஸ்..? – வெளியான செய்தி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

Advertisement

அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
படத்தை பற்றி எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளிவராததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். தொடர்ந்து அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்த தல ரசிகர்களும் சலித்து விட்டனர்.

Advertisement

இந்நிலையில் வலிமை படத்தை பற்றிய ஒரு செய்தி கசிந்துள்ளது அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வலிமை படத்தின் ஷூட்டிங் மொத்தமும் முடிந்த பிறகுதான் வெளியிட வேண்டும் என படக்குழு முடிவெடுத்துள்ளது. வலிமை படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in