லோகேஷ் மற்றும் அனிருத்காக காத்திருந்து ஒன்றாக உணவருந்திய உலகநாயகன்…VIKRAM SUCCESS MEET

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.டத்தினை பார்த்த ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் படங்கள் சரியாக ஓடவில்லை அதனை தற்போது விக்ரம் நிவர்த்தி செய்துள்ளது.இறங்கிய தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியுள்ளது விக்ரம் என தெரிவித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சக்திவேல் சீரியல் நடிகைக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள்

லோகேஷ் மற்றும் அனிருத்காக காத்திருந்து ஒன்றாக உணவருந்திய உலகநாயகன்...VIKRAM SUCCESS MEET 1

விளம்பரம்

நடிகர் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.தற்போது இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனருக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.தற்போது 300 கோடி ரூபாய் வரை இப்படம் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.தற்போதும் திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே

லோகேஷ் மற்றும் அனிருத்காக காத்திருந்து ஒன்றாக உணவருந்திய உலகநாயகன்...VIKRAM SUCCESS MEET 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று சென்னையில் சக்ஸஸ் மீட் நடந்தது.இதில் கமல்ஹாசன்,இயக்குனர் லோகேஷ்,இசையமைப்பாளர் அனிருத் மற்றும் உதயநிதி ஸ்டாலின் என பலர் கலந்துகொண்டனர்.விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.முன்னதாக உணவு பரிமாறும் அறைக்கு வந்த உலகநாயகன் லோகேஷ் மற்றும் அனிருத்காக காத்திருந்து அவர்கள் வந்த பிறகு அவர்களுடன் இணைந்து அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்.இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.உலகநாயகனின் இந்த பணிவை பார்த்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ப்ரேமம் நாயகி மடோனா கடற்கரையில் WEEKEND கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : GALATTA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment