The Indian Times

BIGG BOSS வீட்டை விட்டு வெளியே வந்து அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வெளியிட்ட VJ மகேஸ்வரி

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி.அங்கிருந்து படிப்படியாக பிற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக உருவெடுத்தார்.பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தொகுப்பாளினியாக இருந்த காலகட்டத்திலேயே ரசிகர்கள் இவருக்கு அதிகம். வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி பையன் இருக்கிறார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகனை தனது உழைப்பில் படிக்க வைத்து வருகிறார்.தற்போது மகேஸ்வரிக்கு பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.போட்டியாளர்களிடம் தற்போது சண்டையை ஆரம்பிப்பதே மகேஸ்வரியாகத்தான் இருக்கிறார்.

Advertisement

மகேஸ்வரி நன்றாக விளையாடி வந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.வெளியே சென்ற அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததுக்கு கவலை படல என்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்தேன் ,இந்த ஆதரவை தொடர்ந்து எனக்கு கொடுங்கள் என கூறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.அந்த பதிவில் இவரது ஆதரவாளர்கள் நீங்கள் வெளியே வந்தது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு நீங்க கஷ்டமில்லைனு சொல்லுறீங்க என பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits : CINE ULAGAM

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in