யசோதா – திரை விமர்சனம் (?/5)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் களம் இறங்கினார்.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தில் இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், முகுந்தன், சம்பத்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.தற்போது இவர் நடித்துள்ள யசோதா திரைப்படம் இன்று தமிழ்,கன்னடம்,ஹிந்தி ,மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

யசோதா - திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

பண தேவைக்காக வாடகை தாயாக வருகிறார் சமந்தா.அங்கு இவரை போல பல பெண்களும் வாடகை தாயாக உள்ளனர்.இந்நிலையில் நாளடைவில் இவர்கள் வாடகை தாய்களை வைத்து வேறு ஏதோ செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது சமந்தாவுக்கு தெரியவருகிறது.இதனை அறிந்துகொண்ட சமந்தா அது என்ன திட்டம் என கண்டுபிடிக்கிறாரா,அங்கு இருக்கும் பெண்களை காப்பாற்றினாரா இறுதியாக சமந்தாவுக்கு என்ன ஆகியது என்பதே படத்தின் மீதி கதை ஆகும்

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

யசோதா - திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

இத்தகைய ஒரு வரி கதையை விரிவாக்கம் செய்ய இயக்குனர்கள் ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் பல மெனெக்கெடல்களை மேற்கொண்டுள்ளது படத்தில் தெரிகிறது.ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்து வருகிறது.சமந்தா ஆரம்பத்தில் அமைதியாக இருப்பதும் இரண்டாம் பாதியில் அதிரடியில் பொளந்துகட்டுவதும் ரசிகர்களிடம் பெரிய கைதட்டல்களை பெற்றுள்ளது.வில்லியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் பட்டையை கிளப்பியுள்ளார்.படத்தின் பல காட்சிகள் செட்டுக்குள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் செட் கண்கவரும் விதமாக அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.மற்றபடி படத்தில் குறைசொல்வதற்கு ஒன்றும் இல்லை.கிளைமாக்ஸ் காட்சியில் வைத்த டுவிஸ்ட் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் திரையரங்கில் பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

யசோதா படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment