The Indian Times

கிரிக்கெட் விளையாடி பந்தை அடித்து பறக்கவிட்ட யோகிபாபு!

இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இன்று எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் தன் படத்திற்காக நகைச்சுவை நடிகர் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை பற்றி யோசித்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருபவர் யோகி பாபுவாக தான் இருப்பார். ஒரு காலத்தில் காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் , வடிவேலு , விவேக் , சந்தானம் ஆகியோர் தான் ஞாபகத்திற்கு வருவார்கள்.

ஆனால் இன்றோ சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புடித்த காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்தாலே அதற்கென்றே மக்கள் படத்தை பார்க்க வருகிறார்கள். தற்போது இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ஹேர்ஸ்டைல் பார்த்தே சிரித்து விடும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். யோகிபாபு , பந்தை அடித்து பறக்கவிடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in