The Indian Times

கைதி திரைப்படத்தில் நடித்துள்ள புகழ்! எந்த scene ல வருவாரு தெரியுமா?

கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்து கலக்கிய திரைப்படம் கைதி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் டிவி குக்கு வித் கோமாளி புகழ் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. தற்போது கைதி படத்தில் நடித்துள்ள புகழின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது. நிலையை தற்போது இவர் கைதி படத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in