The Indian Times

மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் அருண் பாண்டியன்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் பாண்டியன்,பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது.

தனது நடிப்பினால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனது வசம் இழுத்திருந்தார்,இருவரது நடிப்பில் வெளியாகிய இணைந்த கைகள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Advertisement

இவர் 1985ஆம் ஆண்டு சிதம்பர ரகசியம் என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.

தற்போது இவர் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார் அருண் பாண்டியன்,இவருக்கு திருமணமாகி மூன்று மகள் உள்ளனர்.

இவரின் மகள் தான் நடிகை கீர்த்தி பாண்டியன்,அருண் பாண்டியன் தன்னை போல சினிமாவில் வளர வேண்டும் என மகள் கீர்த்தியை சினிமாவிற்கு தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்,இப்படம் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அன்பிற்கினியாள் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் அருண் பாண்டியன் தந்தையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வீட்டில் மாட்டுப்பொங்கலை கொண்டாடியுள்ள பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in