The Indian Times

மாமன்னன் பட இயக்குனர் மாரிசெல்வராஜ் வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.இவரின் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.

தனது இயக்கத்தின் மூலம் பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இவர்.ஆரம்பத்தில் ஜாதி ரீதியாக படம் எடுக்கிறார் என்று இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டாலும் ஜாதியினால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர் தனது படத்தில் உணர்த்தியிருப்பார்.

Advertisement

இதனாலேயே இவரது இயக்கத்திற்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

சினிமா மேல் ஆசை ஆனால் கற்று தர ஆள் இல்லை தேடி அலைந்த மாரி செல்வராஜுக்கு வந்தது அதிர்ஷடம் இயக்குனர் ராம் வடிவில்,மாரியின் ஆர்வத்தை பார்த்து அவரை துணை இயக்குனராக சேர்த்துக்கொண்டார்,தனது எல்லா வித்தைகளையும் தனது சிஷியனுக்கு சொல்லி கொடுத்தார் ராம்.

மாரி செல்வராஜ் கற்றது தமிழ், படத்தில் முதல் முறையாக உதவி இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் தங்க மீன்கள்,தரமணி போன்ற ராமின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் இயக்கத்தை கற்றுக்கொண்டு இவர் உருவாக்கிய படம் தான் பரியேறும் பெருமாள்.

இப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இயக்கம் வாய்ப்பு கிடைத்தது.

உடனே தனுஷை வைத்து கர்ணன் படத்தினை இயக்கினார்.இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. உதயநிதி ஸ்டாலினை வைத்து இவர் இயக்கிய மாமன்னன் படமும் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

Advertisement

தற்போது இவர் வீட்டில் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in