The Indian Times

தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.

சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி.

Advertisement

இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார்.

பின்னர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியாகிய அற்புதம் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

இப்படி நடன இயக்குனரில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று இயக்குனர் மற்றும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்,சினிமாவில் வர துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக உள்ளார்.

காஞ்சனா 4வது பாகத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸை காணவில்லை என்பதால் இப்படத்தின் மூலம் அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

தற்போது இவர் சென்னையில் நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in