The Indian Times

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் சேஷு… சோகத்தில் ரசிகர்கள்

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் சேஷு. தனது எதார்த்தமான பேச்சு மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர். இந்த நிகழ்ச்சியிலேயே இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பல வேடங்களில் வந்து மக்களை சிரிக்க வைப்பார் சேஷு.

சின்னத்திரையில் இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்க தொடங்கி உள்ளார். சந்தானத்தின் A1 படத்தில் குடித்துவிட்டு இவர் செய்யும் கலாட்டாக்களுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். தற்போது அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் சேஷு தற்போது மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in