The Indian Times

நடிகர் விமல் வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

கில்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் விமல். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் கதாநாயகனாக பசங்க படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த களவாணி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் விமல்.

Advertisement

இவர் நடித்த வாகை சூடவா படத்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழக விருதினை பெற்றார் விமல்.இந்நிலையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மேல வந்த விமலுக்கு படங்கள் சரியாக ஓடாமல் பெரும் சரிவினை கொடுக்க தொடங்கியது.

இதில் இருந்து மீண்டும் வர விமல் போராடியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது,இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் படங்களை நடித்து வருகிறார்,அந்த வரிசையில் இவர் அண்மையில் நடித்த விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய தெய்வ மச்சான் மற்றும் குலசாமி ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது அடுத்தப்படத்திற்கான வேளைகளில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் விமல்.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Advertisement

இவர் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in