The Indian Times

சினிமாவை கலக்கிய நடிகை ரம்பாவின் திருமண புகைப்படங்கள்

90 களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ரம்பா. அப்பொழுது சினிமாவில் இவர் இல்லாதா படங்களே இருக்காது. இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

தமிழில் 1993 ஆம் ஆண்டு உழவன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியினை கொடுக்கவில்லை இருப்பினும் தளராமல் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினார்.

Advertisement

அதன்படி இவர் நடித்த உள்ளதை அள்ளித்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தின் மூலம் ரம்பாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

அப்பொழுது முன்னணி நடிகையாக இருந்த நடிகைகள் சில பேர் ரம்பாவின் வளர்ச்சியை கண்டு பயந்துள்ளனர்,அந்தளவிற்கு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் நடிகை ரம்பா.

இவர் தமிழ் நடிகையாக இருந்தாலும் கூட அறிமுகம் ஆகியது என்னவோ தெலுங்கில் தான்.1992ல் தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் ரம்பா,ஆனால் தெலுங்கில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்து தமிழுக்கு தாவினார்.

ரம்பாவுக்கு இடையில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் உடனடியாக ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகினார்

இவர் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in