The Indian Times

தளபதி விஜயின் சிறுவயது புகைப்படங்களின் தொகுப்பு இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.

Advertisement

இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.

மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் வெளியாகி11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.தற்போது லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் மீண்டும் மற்றொரு தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இப்படி தமிழ் சினிமாவில் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள தளபதி விஜயின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர்.

இதுவரை பலரும் பார்த்திடாத தளபதி விஜயின் புகைப்படங்கள் இதில் அடங்கியுள்ளதால் ரசிகர்கள் ஷேர் செய்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in