The Indian Times

பொன்னியின் செல்வன் 2 படத்தின் SNEAK PEEK

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.காரணம் தமிழர்களின் வீரத்தினை உலகம் முழுவதும் தெரியப்படுத்த போவது என்பதால்.மேலும் பல மொழி சினிமாக்களும் ஆயிரம் கோடி வசூலை செய்து வரும் நிலையில் இப்படமும் ஆயிரம் கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

பல நடிகர்கள் பல காலமாக இயக்க ஆசைப்பட்ட படம் இது.இறுதியாக இயக்குனர் மணிரத்தினம் கைகளில் வந்து சேர்ந்தது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Advertisement

படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Embed video credits : MOVIESBUFF

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.மேலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.மேலும் சுமார் மொத்தமாக இப்படம் 500 கோடிகள் வரை வசூலித்து சாதனை புரிந்தது.இப்படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

ஒரே செலவில் கையுடன் படக்குழு இரண்டு படங்களையும் எடுத்து முடித்து.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.இது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் களம் இறங்கியுள்ளனர்.நடிகர்கள் தினமும் ஒரு நகரத்திற்கு பிறந்து அங்கு படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் கடுமையான முயற்சியில் இறங்கி உள்ளனர்.

Advertisement

தற்போது இப்படத்தின் சில நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு.இந்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in