The Indian Times

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சரத் பாபு,தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் இவர்,பல படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.

இவர் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகிய நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்,இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்,

Advertisement

இதனை தொடர்ந்து இவர் தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கிவிட்டார்

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் சரத் பாபுக்கு தெலுங்கு சினிமாவும் பெரும் பக்க பலமாக அமைந்தது,தெலுங்கிலும் பல படங்கள் நடித்தும் அசத்தியுள்ளார்,தமிழ் சினிமாவில் நல்ல குணசித்திர நடிகராக வலம் வந்தவர் இவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாமலை மற்றும் முத்து படத்தில் அவருக்கு இணையாக நடித்து அசத்தியிருப்பார்,இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றே கூறலாம்,இந்நிலையில் அண்மையில் உடல்நல குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்ததாக தவறான செய்தி பரவியது,இந்நிலையில் நேற்று அவர் ஹைதராபாத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது,

ரசிகர்கள் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த்,ராதிகா சரத்குமார்,சூர்யா,பார்த்திபன் மகேந்திரன் ,பாக்யராஜ் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றன.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in