The Indian Times

கோலாகலமாக இன்று நடைபெற்ற நடிகை அமலாபால் வளைகாப்பு நிகழ்ச்சி

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் அமலாபால்,பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய மைனா படம் மாபெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகையாக சினிமாவில் உருவாகினார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் மாற்றி மாற்றி படம் நடிக்க தொடங்கிவிட்டார்.

Advertisement

இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த வேட்டை,தெய்வத்திருமகள் படம் எல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார்.இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

இப்படத்தில் இயக்குனர் ஏஎல் விஜய் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் திருமணமும் செய்து கொண்ட நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.இதில் இருந்து மீண்டு வந்த அமலாபால் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

இந்நிலையில் அவர் தனது நண்பர் ஜகத் தேசாய் அவருக்கு காதல் சொல்லவே அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.தற்போது இவருக்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபால் வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in