The Indian Times

நடிகை மீனா மீண்டும் நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.

Advertisement

இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.

ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

தற்போது அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளார். மீண்டும் அவர் நாயகியாக நடிக்க இருக்கும் படத்தின் பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in