The Indian Times

குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சுஜா வருணே

பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் துணை நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தற்போது வரை இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.

Advertisement

தற்போது கிடைத்துவரும் துணை கதாபாத்திரம் கூட இவருக்கு சரியாக அமையவில்லை எனவே இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் மட்டும் அறிமுகம் ஆகாமல் மக்களிடமும் அறிமுகமாகினார்.

இந்த நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி நடிப்பு நடனம் என இரண்டையும் ஓரம்கட்டிவிட்டு குடும்ப வாழ்க்கையை மட்டும் அழகாக கவனித்து வருகிறார்.இந்நிலையில் பிக் பாஸ் சுஜா வருனே குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in