The Indian Times

திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.

தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்.

Advertisement

இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.

போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.

கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து பெரும் ஹிட் அடித்தது.

Advertisement

அண்மையில் வெளியான அயலான் படமும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.தற்போது இவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in