The Indian Times

கணவருக்கு காதல் முத்தங்களை அள்ளிக்கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

Advertisement

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்,

மேலும் பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார், இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷின் பிறந்தநாள்.காலை முதல் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முத்தமிட்டு புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in