The Indian Times

தனது இரட்டை சகோதரனுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நஸ்ரியா பகத்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.

இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது.

தற்போது நல்ல கதைகளை கேட்டு வருகிறார் நஸ்ரியா

Advertisement

இவர் தனது தம்பியுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in