The Indian Times

பாடகி சின்மயி திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகி சின்மயி.இவரின் குரலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் பாடகியாக 2002 ஆம் ஆண்டு மாதவன் ,சிம்ரன் நடிப்பில் வெளியாகிய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்கிற பாடலை பாடி பாடகராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து பிரசன்னா மற்றும் கனிகா நடிப்பில் வெளியாகியாக பைவ் ஸ்டார் படத்தில் பாடல் பாடினார்.ஒரே ஆண்டு இவர் பாடிய இரண்டு பாடல்களும் பெரும் ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறினார்.

பல இசையமைப்பாளரின் இசையிலும் இவர் குரல் ஒலித்துவிட்டது.அதேபோல் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பாடல்களை பாடி பட்டையை கிளப்பினார் சின்மயி.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து சின்மயிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

வாய்ப்பு தேடிய நாட்களில் தனக்கு வைரமுத்து தொந்தரவு கொடுத்தார் என மீடுவில் புகார் அளித்தார்.இது பெரும் விமர்சையாக இணையவாசிகளிடம் பேசப்பட்டது

Advertisement

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in