The Indian Times

என்னை காதலன் ஏமாற்றிவிட்டான்.. உண்மையை போட்டுடைத்த நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழில் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் மற்றும் சங்கத்தமிழன் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நாயகியாக நடித்து அறிமுகமாகிய ஒரு நாள் கூத்து திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படத்தை தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகிய டிக் டிக் டிக் திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. மேலும் இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் என்பதாலே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் இருக்கிறது. தற்போது இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதலன் குறித்து பேசியுள்ளார். அதில், தான் நெகட்டிவாக எதாவது நினைத்தால் நடந்து விடும் எனவும், தன்னை காதலன் ஏமாற்றிவிடுவான் என நினைத்ததாகவும், அதுபோலவே அவர் ஏமாற்றி விட்டதாகவும் பேசியுள்ளார். ஆனால் யார் அந்த காதலன் என்பது குறித்து நிவேதா இதுவரை வெளியே சொல்லவில்லை.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in