The Indian Times

புதிய கார் வாங்கிய பிக் பாஸ் VJ அர்ச்சனா.. ரசிகர்கள் வாழ்த்து

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் விஜே அர்ச்சனா. மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார். இந்த ராஜா ராணி தொடரின் மூலம் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டது. இவரின் நடிப்பு பல ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார். இவருக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. ஒற்றை பெண்ணாக வீட்டில் உள்ள அனைவரயும் சமாளித்து இருந்தார். இதனால் ரசிகர்கள் இவரை வெற்றிபெற வைத்தனர். மேலும் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார் அர்ச்சனா.

Advertisement

இந்நிலையில் இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in