The Indian Times

மணப்பெண் ஆனார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா.. மாப்பிளை யாரு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .

Advertisement

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது இவருக்கு திருமணம் என செய்தி வெளியாகியுள்ளது.பலரும் இவரது திருமணம் எப்பொழுது என காத்திருந்த நிலையில் தற்போது இவரது திருமணம் நடைபெற உள்ளது மேலும் வருகிற நவம்பர் 27ல் வரவேற்பு நடைபெற உள்ளது.இவரை திருமணம் செய்துகொள்ளும் வினு என்பவர் விஜய் தொலைக்காட்சியில் கிரியேட்டிவ் டைரக்டர் ஆக வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,விரைவில் ரித்திகா தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in