சஞ்சீவுக்கு தனது கையாலேயே சமைத்து SURPRISE கொடுத்த ALYA MANASA

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

சஞ்சீவுக்கு தனது கையாலேயே சமைத்து SURPRISE கொடுத்த ALYA MANASA 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.அண்மையில் தனது மகன் அர்ஷ் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்தார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

சஞ்சீவுக்கு தனது கையாலேயே சமைத்து SURPRISE கொடுத்த ALYA MANASA 2

விளம்பரம்

தற்போது இவர் தனது கணவர் சஞ்சீவ் காலையில் படப்பிடிப்புக்கு செல்வதற்கு ஆல்யா காலையிலேயே எழுந்து ஜூஸ் மற்றும் பிரெட் ஆம்ப்லேட் தயார் செய்து அசத்தியுள்ளார்.இதுவரை சமைக்காத நிலையில் முதல்முறையாக காதல் கணவருக்காக சமைத்து கொடுத்துள்ளார்.இதனை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Embed video credits : SANJIEV AND ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment