The Indian Times

ராமர் மார்கெட்டையையே காலி பண்ணிட்டாங்க – ஆதிபுருஷை பங்கமாக வச்சி செய்த BLUESATTAI மாறன்

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.இதனால் தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ் மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய ராதே ஷியாம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed video credits : TAMIL TALKIES

தற்போது இப்படத்திற்கு அடுத்து இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ் நடித்துள்ளார்.இராவணன் ஆக ஹிந்தி நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார்.கதாநாயகியாக க்ரிதி சனோன் நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.நேற்று இப்படம் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.இப்படத்தினை விமர்சகர் BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,படம் முழுக்க நீளமாக எடுத்து வைத்துள்ளனர்,அனைத்தும் நீளமான காட்சிகள்,கிராபிக்ஸ் படத்தில் அமையவில்லை,ராவணனுக்கு புள்ளிங்கோ மாதிரி முடி வெட்டி விட்டுருக்காங்க,இப்படத்தை எடுத்த ராமர் மார்கெட்டையை காலி பண்ணிட்டாங்க ,படத்துல எந்த விரிவாக்கமும் இல்லை,லக்ஷ்மணன் கதாபாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கல,வந்த படத்தை எடுங்கடான்னா வந்து நொந்த படத்தை எடுத்திருக்காங்க என கேலி செய்து கலாய்த்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in