The Indian Times

மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.

மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்

இந்நிலையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் இந்த ஆண்டு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியுள்ளார்.

Advertisement

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in