படம் ரொம்ப மொக்கையா இருக்கு.. தல ரசிகர் கொடுத்த Honest Review | Valimai Review
இரண்டு வருட கடுமையான போராட்டங்களுக்கு பின்பு வெளியாகியுள்ளது வலிமை திரைப்படம். 2 வருடங்களாக அஜித்தை பார்க்காத சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் குறித்த அப்டேட்கள் கிடைத்தபோது மகிழ்ச்சி கொண்டாடத்தில் திளைத்தனர். மேலும் 24ம் தேதியை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஒரு வழியாக காலை 4 மணி ஷோ திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் கேட்ட போது படம் மிகவும் நன்றாக இருந்ததாகவே பெரும்பாலான ரசிகர்கள் கூறிவிட்டு சென்றனர். ஆனால் தற்போது இருண்டாவது மற்றும் மதிய காட்சிகள் முடிவடைந்த நிலையில் இரு வேறு மாதிரியான கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்போது ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஒருவர், படத்தில் சண்டை காட்சிகள் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் மட்டுமே நன்றாக இருந்ததாகவும், மற்றபடி சென்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் கூறினார். அம்மா சென்டிமெண்ட் காட்சிகள் ஒன்று கூட மனதை தொடவில்லை என்று கூறிய அவர் இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் ஒன்று தேவையில்லை என்பது போல் உள்ளதாக கூறினார். தல ஒருவருக்காக மட்டும் இந்த படத்தைப் பார்க்கலாம் என்றும் மற்றபடி படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் அவர் இணையத்தில் பிரபலமான திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் எப்பேர்பட்ட படம் எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு குறை ஒன்றை கண்டுபிடித்து கலாய்த்து விடுவார். அப்படிப்பட்ட அவரிடம் தல ரசிகர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார், அதில் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தல படம் கஷ்டப்பட்டு வெளிவந்துள்ளது. படம் மோசமாக உள்ள நிலையில் நீங்கள் திரைப்படத்தைப்பற்றி உடனே விமர்சன் செய்து வீடியோ வெளியிட வேண்டாம். ஒரு மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். Watch the below video…
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →