The Indian Times

எங்களுக்கு பையன் பொறந்திருக்கான்.. மகிழ்ச்சியான செய்தியை கூறிய சிங்கர் அஜய் கிருஷ்ணா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.அந்தளவிற்கு அருமையாக பாடும் திறமையுடையவர்.இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பாடல் பாடி அசத்தி வருகிறார்,மேலும் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழர்களிடம் பாடல்களை பாடி வரவேற்பும் பெற்றுள்ளார். இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.மேலும் சூப்பர் சிங்கர் சில நிகழ்ச்சிகளில் விருந்தினராக வந்து பாடல்களை பாடி அங்குள்ளவர்களை மகிழ வைப்பார்.

தற்போது இவர் ஜெசி என்ற பெண்ணை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.ஹிந்து மற்றும் கிறிஸ்தவம் முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அண்மையில் மனைவி ஜெசி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது தங்களுக்கு மகன் பிறந்திருப்பதை மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in