The Indian Times

காதலனுடன் காதலர் தினத்தை கேக் வெட்டி ROMANTIC நடனமாடி கொண்டாடிய பிக் பாஸ் ஆயீஷா

விஜய் தொலைக்காட்சியில் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சி மூலம் தான் முதல் முறையாக கேமிராவை சந்தித்து சின்னத்திரையில் தோன்றியவர் ஆயீஷா.பின்னர் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.அதனை தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களிடம் அங்கீகாரம் கொடுத்தது ஜீ தமிழில் இவர் நடித்து வந்த சத்யா என்ற சீரியல் தான்.இந்த சீரியல் இவருக்கு மாபெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது,திரும்பும் பக்கமெல்லாம் சத்யா தொடர் பற்றித்தான் பேச்சு என்று கூறினால் மிகையாகாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது வரை இவரை ரசிகர்கள் சத்யா என்று தான் அழைத்து வருகிறார்கள் அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.பின்னர் டிக் டாக்கில் மிக பிரபலம் ஆகினார்.மேலும் லட்ச கணக்கானோர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். போட்டியாளர்களிடம் அவ்வப்பொழுது வெடித்து சிதறி வருகிறார் ஆயீஷா.பின்னர் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு ஆயீஷா வெளியே சென்றாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவை தொடர்ந்து அளித்து தான் வருகின்றனர்.இந்நிலையில் ஆயீஷா தான் காதலிப்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.காதலர் தினத்தில் அவரது புகைப்படத்தினை வெளியிட்டு இவரை தான் காதலிப்பதாக கூறியுள்ளார் ஆயீஷா.தற்போது காதலர் தினத்தில் காதலர் உடன் கேக் வெட்டி செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடி பட்டையை கிளப்பியுள்ளார்.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://youtu.be/l8gqaBYscFg?t=178

Embed video credits : With love aayesha

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in