The Indian Times

என்னோட அதிகாரம் ஜெயிக்குதா,உன்னோட பொறுக்கித்தனம் ஜெயிக்குதான்னு பாப்போம்… வெற்றியை கைது செய்ய உத்தரவிட்ட அபி… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த தொடரின் மூலம் இருவரும் தமிழக மக்களின் இதயத்தில் தனி இடத்தினை பிடித்துள்ளார்கள் எனலாம்,அந்தளவிற்கு கணவன் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார்கள்,தற்போது இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் 6 வருடத்திற்கு பிறகு உண்டான கதையை ஆரம்பித்துள்ளது படக்குழு.6 வருடத்திற்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளிவருகிறார் வெற்றி.தனது குழந்தையை மனைவி அபி கலைத்துவிட்டதால் வெறிபிடித்த மிருகம் போல் மாறுகிறார்.தற்போது இவர் ஜெயிலில் இருந்து வெளிவந்துள்ளார்.

அதே சமயம் அபியும் படித்து ஐஏஎஸ் அதிகாரியாக அதே ஊறி மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் சேருகிறார்.தற்போது தனது கணவர் வெற்றியை பார்த்து நான் திரும்ப வருவேன்னு நினைக்கவில்லைல என கூறவே ஓடி போனவ திரும்ப வந்து தான் ஆகணும் என வெற்றிக்கூறுகிறார்,உடனே அபி என்னோட அதிகாரம் ஜெயிக்குதா,உன்னோட பொறுக்கித்தனம் ஜெயிக்குதான்னு பாப்போம் என கூறி வெற்றியை கைது செய்ய உத்தரவிடுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த நெட்டிசன்கள் விஸ்வாசம் மற்றும் ரெட் படத்தை எடுத்து வச்சிருக்கீங்க என கூறி கலாய்த்து வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in