The Indian Times

தல அஜித்துக்கு முத்தம் கொடுக்க ஆசை! இளம் சீரியல் நடிகை பேட்டி.

தமிழ் திரையுலகில், நடிப்பதையும் தாண்டி தனக்குள் ஒளித்து வைத்துள்ள பல திறமைகளை வெளிக்காட்டி வருபவர் தல அஜித். சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து கோடி கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் முன்னணி நடிகர்களுள் அஜித்தும் ஒருவர். இவரது படங்களை திரையரங்கில் வெளிவந்தால் போதும் அது ரசிகர்களுக்கு திருவிழா தான். நடிப்பதற்கும் அப்பாற்பட்டு கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவது, எம்.ஐ.டி மாணவர்களுக்கு ஆளில்லா விமானம் உருவாக்க உதவிய ஆலோசகர், துப்பாக்கி சூடு போட்டியில் தங்கம் வென்றது போன்ற பல திறமைகளை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறார் நடிகர் அஜித்.

Advertisement

சமீபத்தில் அஜித் துப்பாக்கி சூடு போட்டியில் தங்கம் வென்ற செய்தி பட்டி தொட்டி எங்கும் பரவி திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் மற்ற நேரங்களில் தன்னுடைய பல தனி திறமைகளை வெளிக்காட்டி வருகிறார் அஜித். தற்போது அவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

Advertisement

படத்தின் பெயர் வலிமை என்பதை தவிர வேறு எந்த ஒரு தகவலும் படக்குழுவினரிடமிருந்து வராததால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வலிமை படத்தின் அப்டேட் கிடைக்க விட்டாலும் தலையின் வலிமையான அப்டேட் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ராட்சசன் திரைப்பட பிரபலம் மற்றும் சீரியல் நடிகையான ரவீனா தாஹா அஜித்தை பற்றி பேசி உள்ளதாக தகவல் வெளியாகி விரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் ரவீனா தாஹா யுடியூப் சேனல் நேர்காணலில் பங்கேற்று இருந்தார். அதில் அவர் தல அஜித் அவர்களுக்கு முத்தம் கொடுக்க ஆசை என்று கூறியது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவியது. இது வயதிற்கு மீறிய ஆசை என்று சிலர் கேலி செய்து வந்தாலும் அஜித் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகிறார்கள். அஜித்தை திரையில் பார்த்து பல நாட்கள் ஆனாலும் அவர் தனது திறமைகளை இந்த உலகிற்கு வெளிப்படுத்தி பலரிடம் பாராட்டு பெற்று வருகிறார் என்பது ரசிகர்களின் மனதிற்கு குளிர்ச்சியூட்டியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in