The Indian Times

ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் ஹிட் திரைப்படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாய் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் கடின உழைப்பால் இன்று சிகரம் தோட்ட நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை திரையில் பார்த்தாலே போதும் என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் இவரது படம் வெளியானால் ரசிகர்களுக்கு திரையரங்கு திருவிழா போல் காட்சியளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்கள் எதிர்ப்பது காத்திருக்கும் ஒரு விஷயம் வலிமை திரைப்படத்திற்காக மட்டும் தான். வலிமை படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள் கடந்த பல நாட்களாக வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.

Advertisement

ஆனால் படக் குழுவினரே படத்தின் பெயர் வலிமை என்ற அப்டேட்டிற்கு பிறகு எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. இதனால் மனமுடைந்து போன ரசிகர்கள், பிரதமர் , முதலமைச்சர் என ஒருவரை விட்டுவைக்காமல் அவர்கள் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் வலிமை அப்டேட் கேளுங்க அய்யா என்று கூச்சலிட்டு கத்தினார். இந்த செய்தி படக்குழுவினர் காதிற்கு போக, அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் .படப்பிடிப்பு முடிந்த பிறகே எதுவாக இருந்தாலும் கூறமுடியும் என்ற அறிக்கையை வெளியிட்டனர்.

Advertisement

இதனால் அஜித் ரசிகர்கள் தீவிரமாக வலிமை அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக தமிழகத்தின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட தல அஜித் தங்கம் வென்று மாஸ் காட்டினார். அவருக்கு சினிமா பிரபலங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள் வரை அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த வகையில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மற்றொரு செய்து வெளியாகியுள்ளது. அஜித் நடித்து பிரமாண்ட வெற்றி அடைந்த பில்லா படம் மீண்டும் திரையரங்கில் திரைதப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் சத்தியம், எஸ்கேப் சினிமாஸ், பி.வி.ஆர், பிளாசோ, வுட்லான்ட்ஸ் , ஏ.ஜி.எஸ், எஸ்.2 பெரம்பூர் ஆகிய திரையரங்கில் மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தல யை திரையில் பார்க்கப்போகிறோம் என்ற உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in