The Indian Times

ரிலீசாகிறது கர்ணன் திரைப்படத்தின் 3வது சிங்கள் பாடல்!

ஒல்லியாக இருந்தாலும் கில்லி தான் என்று தன் நடிப்பாற்றலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தனுஷ். ஆரம்பகாலத்தில் இவரை பார்த்து விமர்சிக்காத ஆட்களே கிடையாது. காதல் கொண்டேன் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டமே இவரை பார்த்து சிரித்தது மறக்க முடியாத நிகழ்வு என்று ஒரு பேட்டியில் இவரே கூறியிருப்பார். ஆனால் தன் விடா முயற்சியினால் தன்னை விமர்சித்தவர்களின் மூக்கை உடைப்பது போல் தன் வெற்றி தடத்தை ஆழமாக பதித்து விட்டார் தனுஷ். இன்று இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களையே முந்தி விட்டு ஹாலிவுட்டுக்கு சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு.

Advertisement

இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் இது வரை கண்டிராத தனுஷை நம்மிடம் வெளிக்காட்டி அசுர வெற்றி அடைந்தது. இவருக்கு இப்படியும் நடிக்க தெரியுமா என்று அனைவரையும் வியந்து பார்க்க செய்த படம் அசுரன் . அந்த வகையில் தற்போது தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கர்ணன் படத்தில் நடித்திருக்கிறார்.மாரி செலவராஜ் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சமீபத்தில் பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி வருவதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த ” கண்டா வரச்சொல்லுங்க ” பாடல் சமூக வலைத்தளங்கில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 3வது பாடல் இன்று மாலை 4 மணிக்கு ரிலீஸாவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் தனுஷ் ரசிகர்கள் தயாராக இருங்கள் என்றும் ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த பதிவை கண்ட தனுஷ் ரசிகர்கள் பாடலை எதிர்பார்த்து காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in