விஜய் ஏ.ஆர்.முருகதாஸுடன் கருத்து வேறுபாடா? தகவல் உள்ளே.

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம்
இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களுள் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். ரசிகர்களின் பல்ஸை உணர்ந்து அவர்களுக்கு ஏற்றது போல் படங்களை மாஸாக தயாரிப்பதில் இவர் வல்லவர். இவரது இயக்கத்தில் வெளியான தீணா, கஜினி, துப்பாக்கி , கத்தி ஆகிய திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியை அடைந்துள்ளது. முன்னணி நடிகர்களின் திரைப் பயணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறார்.

விஜய் ஏ.ஆர்.முருகதாஸுடன் கருத்து வேறுபாடா? தகவல் உள்ளே. 1
 

அப்படி பட்ட இயக்குனர் சமீப காலமாக தோல்வி படங்களை தொடர்ந்து கொடுத்து வருவதால் ரசிகர்கள் இவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலும் சரிந்து போனது. கடைசியாக இவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் தோல்வி படமாய் அமைந்தது. இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் ஏ.ஆர்.முருகதாஸிடம் நஷ்ட ஈடு கேட்டது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயுடன் இனைந்து தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

விஜய் ஏ.ஆர்.முருகதாஸுடன் கருத்து வேறுபாடா? தகவல் உள்ளே. 2

ஏ.ஆர்.முருகதாஸும் ஒரு வீடியோவில் அதைப்பற்றி மறைமுகமாக கூறி இருந்தார். ஏற்கனவே விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான சர்கார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் விஜயை வைத்து படம் எடுக்க தளபதி 65ற்காக விஜயிடம் அவர் கூறிய கதை விஜயை திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விஜய் முருகதாஸை கிழட்டிவிட்டு , நெல்சனுடன் இணைந்து விட்டார் என்று பேசப்பட்டு வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

விஜய் ஏ.ஆர்.முருகதாஸுடன் கருத்து வேறுபாடா? தகவல் உள்ளே. 3

மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் ஏ.ஆர்.முருகதாஸ் விஜயின் ட்விட்டர் பக்கத்தை unfollow செய்து விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது அந்த கதையில் ஏ.ஆர்.முருகதாஸ் விஷாலை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பக்கம் தோல்வி படங்களை கொடுக்க , விஷாலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாகும் படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை. அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment