The Indian Times

ஐபிஎல் போட்டியை பார்க்க சேப்பாக்கம் வந்த தல அஜித் குடும்பம்….

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.

அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள்.இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .

Advertisement

வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

 

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.

இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்றது.தற்போது அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளது.

படத்திற்கு இயக்குனராக முதலில் விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகி இருந்தார்,பின்னர் அவர் கதையில் லைக்கா நிறுவனத்திற்கு நாட்டமில்லாததால் அவரை நீக்கி விட்டனர்.தற்போது அஜித்தின் அடுத்த படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் இதுகுறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் படக்குழு பக்கம் இருந்து வரவில்லை.இந்நிலையில் அஜித் தற்போது தனது பைக் ரைடு தொடர்ந்துள்ளார்.வெளிமாநிலத்தில் பைக் ரைடு செய்து வருகிறார் தல அஜித்.

Advertisement

இந்நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெற்றது,அதனை காண அஜித் மனைவி ஷாலினி,மகன் மற்றும் மகள் வந்திருந்தனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in