The Indian Times

தங்க மீன்கள் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது… நல்ல வளர்ந்துட்டாங்களே… லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்.இவர் இயக்கும் படங்களில் புதுவிதமான எதையாவது கையாண்டு மக்களிடம் கொண்டு செல்வதில் இவர் வல்லவர்.இவர் 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர்,

இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய தங்க மீன்கள் படம் மாபெரும் வெற்றிப்படமாக பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது.கற்றது தமிழ் படத்திற்கு பிறகு ஐந்து வருடங்கள் கடினமாக உழைத்து தங்க மீன்கள் படத்தினை இயக்கியுள்ளார்.

Advertisement

இப்படத்தில் இவரின் மகளாக நடித்தவர் தான் சாதனா.தனது குறும்பு நடிப்பினால் ரசிகர்களை எளிதாக கவர்ந்தவர்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்திற்கு பிறகு இவர் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பார் என ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்படத்திற்கு பிறகு இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை,நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராம் இயக்கத்தில் வெளியாகிய பேரன்பு படத்தில் மம்முட்டிக்கு மகளாக நடித்து அசத்தினார்.இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

தற்போது இவர் சினிமாவுக்கு இடைவெளி விட்டுவிட்டு நடனத்தில் களம் இறங்கிவிட்டார்.தற்போது பரத நாட்டியத்தில் கலக்கி வருகிறார் சாதனா. தற்போது மிகப்பெரிய பெண்ணாக வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் சாதனா

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே இது சாதனாவா நல்ல வளர்ந்துட்டாரே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் வைரலாகியதை தொடர்ந்து ரசிகர்கள் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in