The Indian Times

படத்தை உயிரை கையில புடிச்சிட்டு பார்த்துட்டு இருந்தோம் – வீரம் ஹிந்தி ரீமேக் படத்தை கழுவி ஊத்திய ப்ளூசட்டை மாறன்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான் கான்.இவருக்கென ஹிந்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சல்மான் கான்.மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆவது வாடிக்கையாக உள்ளது.இதனால் அடுத்தடுத்து படங்களில் இடைவிடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் தல அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய படம் வீரம்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியையும் வசூலையும் பெற்றது.தற்போது இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர்,இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார்.கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் மேலும் நாசர் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார்.ரவி பாசூர் இசையில்,அனல் அரசு சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Advertisement

இப்படம் நேற்று வெளியாகியுள்ளது.இப்படத்தினை தற்போது ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.இந்த விமர்சனத்தில் படத்தை உயிரை கையில பிடிச்சிட்டு பார்த்துட்டு இருந்தோம்,படம் முழுக்க செண்டிமெண்ட் போட்டு சாவடிச்சிட்டானுக.எல்லாம் செயற்கையா இருக்கு,மெட்ரோ ட்ரெயின் ல வர சண்டை காட்சியில் டெல்லி மெட்ரோவே ஸ்தம்பிச்சிட்டு அந்தளவுக்கு எடுத்து வச்சிருக்காங்க,படத்துல ஒண்ணுமே நல்லா இல்லை என கழுவி ஊத்தியுள்ளார்

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in