The Indian Times

பிறந்தநாளில் இனியா சீரியல் குழுவினருக்கு விருந்து வைத்த ஆல்யா மானசா

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆல்யாவின் பிற சீரியல்களை போலவே இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது ஆல்யா மானசா தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் மேலும் இனியா சீரியல் குழுவிற்கும் தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரியாணி விருந்து வைத்து அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in