The Indian Times

குடும்பத்தில் முதல் பட்டதாரியான நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன் மகள்

தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்தவர் அந்தோணி தாசன்,இசை மீதுகொண்ட காதலால் அதனை கற்று கொண்டு நாட்டுப்புற பாடகராக உருவெடுத்தார்.

பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வரவேண்டும் என குறிக்கோளுடன் உழைத்தார் அந்தோணி தாசன்,அதன்படி இவரது திறமைக்கு சந்தோஷ் நாராயணன் இசையில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இவர் முதல் முதலாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய சூது கவ்வும் படத்தில் காசு பணம் துட்டு என்ற பாடலில் சில வரிகளை பாடி பட்டையை கிளப்பினார்.

மேலும் அடுத்ததாக பாண்டிய நாடு,வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தில் பாடல்களை பாடி முன்னணி பாடகராக உருவெடுத்தார்,இவரது குரலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

இவர் பாடிய பல பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் குடும்பத்தில் முதல் முதலாக இவரின் மகள் கல்லூரி படிப்பினை முடித்துள்ளார்.

இதனால் பெரும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார் அந்தோணி தாசன்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in