The Indian Times

அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகியவர் தினேஷ்.

இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.அன்று முதல் இவர் அட்டகத்தி தினேஷ் என்று தான் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.முன்னதாக ஈ மற்றும் ஆடுகளம் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்றார்.

Advertisement

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.தினேஷ்.சில படங்கள் வெற்றியை தந்தாலும் பல சில படங்கள் தோல்வியை தான் இவருக்கு அளித்தது.

இருப்பினும் மனம்தளராமால் போராடி வருகிறார்.இவர் நடித்த விசாரணை படம் குக்கூ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதை போன்ற படத்தினை தான் இவரிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமீப காலமாக இவருக்கு படங்கள் ஏதும் தமிழ் சினிமாவில் சரியாக அமையவில்லை.இந்நிலையில் தினேசுக்கு அடுத்ததாக J.BABY படம் வெளியாக உள்ளது,

தற்போது இப்படத்திற்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்,இதற்காக இவர் தற்போது ஆளே மாறியுள்ளார்,இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in